வலைப் பதிவுலகில் அடியெடுத்து வைக்கிறேன் . என் முதல் வலைப் பதிவில் எதை எழுதுவது? என்னென்னவோ எண்ண ஓட்டங்கள். அனைத்திலும் முந்தியிருப்பது நம் நாட்டில் பரவியிருக்கும் ஊழலே. இதை ஒழிப்பது இயலுமா? இயலுமெனில் எவ்வாறு?
எதையும் நேர்மறையாக நோக்கவேண்டும் என்ற அடிப்படையில் ஊழலை ஒழிக்க முடியும் நம்பிக்கையுடன் துவங்குவோம்.
யார் துவங்குவது?
நாம்தான்.
நாமென்றால்?
ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை உடையவர்கள் மற்றும் கையூட்டு எக்காரணம் கொண்டும் தரமாட்டோம் என்று நிற்பவர்கள் நம்மில் எத்தனை பேர்? கணக்கெடுக்க வலையுலகம் உதவுமா?
அறிய முயலும் முயற்சியிது.
வலைப் பதிவர்களில் எத்தனை பேர் இதற்கு ஆதரவுக்கரம் நீட்டுவர்? அத்தகையோர் வலையுலகிற்கு வெளியில் உள்ளவர்களை அணுகி கருத்துக்கணிப்பு நிகழ்த்தி விவரம் தெரிவிப்பார்களா என்பதைத் தெரிந்துகொள்ள விருப்பம். உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நல்ல முயற்சி . அரசு ஊழியர்களுக்கு இணையாக தனியார் துறையும் [ பி எஸ் என் எல் ] எடுத்துக்காட்டுக்காக இதனை குறித்துள்ளேன் தற்போது தொலை பேசியை சரி செய்ய வரும் பொழுது கை நீட்டுகிறார்களே கவனம் உண்டா? கண்டிப்பாக எனக்கு கையூட்டு கொடுப்பதில் உடன்பாடு இல்லைதான் . ஆனாலும் நமக்கு உடனே காரியம் நடக்க நேரத்தை சேமிக்க கண்டிப்பாக ஒரு விலை கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்ற நிலைக்கும் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். முயற்சிப்போம். முறியடிப்போம்.
பாலு
Bribing has become part and parcel of our day to day life. It is very very difficult to break the chain. i think only in writing it is possible to eradicate corruption. At least let us get some consolation by just sharing our views
umabaloo
Post a Comment